பெருங்காடு

பெருங்காடு


வியாழன், 24 பிப்ரவரி, 2011

ஸ்ரீ    முத்துமாரி அம்பாள் ஆலயம் 
__________________________________
புங்குடுதீவில் உள்ள புராதன பழமை வாய்ந்த ஆலயங்களில் பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயமும் ஒன்றாகும் . பக்தர் ஒருவரின் வாக்குப்படி ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து அம்பாளின் மூலவிக்கிரகம் ஒன்றினை கண்டெடுத்து அங்கெ காணப்பட்ட வேப்ப மரத்தின் கீழ் வைத்து வழிபட்டனர் .அப்போது புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த இராமநாதர் அம்பலவாணர் அவர்கள் தனதுவயல்  காணியில் ஒரு ஆலயத்தை அமைத்து அம்பாளை பிரதிஸ்டை செய்து வழிபட்டுவர ஒழுங்கு செய்தார் .பின்னர் அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த ஆலயத்தை பொதுமக்களிடம் தெரிவாகும் ஒரு நிர்வாகத்திடம் கையளிக்க முடிவு செய்தனர்.அதன்படி(1947 )முறையே ஆசிரியர்களான சு.வில்வரத்தினம் ,ந.சோமசுந்தரம்,சி.மாணிக்கம் ஆகியோரின் தலைமையின் கீழ் தெரிவான நிர்வாகத்தில் ஆலயம் மிக சிறப்பாக வளர்ச்சி கண்டது .
இவ்வாலயத்தில் வருடாந்த திருவிழா ,மாசி மக இலட்சார்ச்சனை ,ஆடிப்பூரம்  திருவெம்பாவை நவராத்திரி விழாக்களும் வெகு விமரிசையாக நடாத்தப்படும் .வடபகுதியிலேயே மிகவும் அழகான தாமரை தடாகத்தினை முன்பக்கமாக கொண்ட ஒரே ஒரு ஆலயமாக இது திகழ்ந்தது.பல நிழல் மரங்கள் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் வேள்விக்காக  ஆடு மாடு சேவல் என விலங்குகளை காணிக்கையாக வழங்கும் வழக்கம் இருந்து வந்தது . ஆனால் பிற்காலத்தில் இந்த வழமையை ஒழிக்க வேண்டும் என்று இந்த ஆலய நிர்வாகத்தினர் முடிவெடுத்து அதனை  நிறைவேற்றி வைத்தனர் .இந்த புரட்சியை முதலில் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் இந்த நிர்வாகத்தினர் .இந்த ஆலயத்தின் கூட்டுப் பிரார்த்தனை மன்றத்தினர் மிகவும் சிறந்த பணியை செய்து வந்தனர் . இவர்களோடு ஆலயத்திருவிழா காலங்களில் மடத்துவெளி முருகன் ஆலய கூட்டு பிராத்தனை குழுவினரும் இணைந்து கூட்டு வழிபாட்டை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.இந்த வழிபாட்டில் முக்கியமாக காந்தி குணரத்தினம் நாகேந்திரம் மாணிக்கம் ஆசிரியர் போன்றோர் முக்கியமானவர்கள் . இப்போது இந்த ஆலயம் மூர்த்தி  தலம் விருட்சம் தீர்த்தம் ராஜகோபுரம் என அனைத்தும் அமையப் பெற்ற சிறப்பொடு அம்பாள் ஆட்சி செய்ய கோலோச்சுகிறது ..இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கென சுவிட்சர்லாந்து   ஜெனீவா நகரில் வசிக்கும் செல்லையா சந்திரபாலன் சுவிஸ் மக்களிடம் நிதி சேகரித்து அனுப்பியிருந்தமை பாராட்டத் தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக