திங்கள், 5 மே, 2025
வெள்ளி, 7 மார்ச், 2014
புதன், 20 மார்ச், 2013
பெருங்காடு சிவன் கோயில்.
மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.
யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை ஸ்தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை மதுரையிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை. ஆலயத்தின் திருப்பணிகள் முடியுமுன்னரே மார்க்கண்டேயக் குருக்கள் கதிர்காமத்திலே இறைவனடி சேர்ந்தார்.
அதன் பின்னர் குருக்களின் மனைவியாரும் அவரின் சகோதரர்களும் சேர்ந்து ஊர்மக்களின் உதவியோடு பிள்ளையார் கோயில்இ நவக்கிரக கோயில்இ வைரவர் கோயில் ஆகியவற்றோடு கூடிய ஆலயத்தின் திருப்பணிவேலைகளை நிறைவு செய்து சிறப்பாக கும்பாபிடேகத்தினையும் செய்தார்கள்.
இரண்டாவது கும்பாபிடேகமும் சிறிது காலத்திலேயே இடம்பெற்றது. இதன்பின் 1977ம் ஆண்டு பஞ்சலிங்க கோயில், மகா விஸ்ணு கோவில் என்பனவும் அமைக்கப்பட்டு மூன்றாவது கும்பாபிடேகமும் சிறப்பாய் நடைபெற்றது. இதன்பின் 1991இலும் பின் 2005இலும் கும்பாபிடேகங்கள் நடைபெற்றன.
இவ்வாலயத்திலே வருடாந்த மகோற்சவம் பங்குனி மாதத்தில் நடைபெறும். இதைவிடவும் சங்கிராந்தி பூசை, பிரதோசம், நால்வர் பூசை. நவராத்திரி பூசை, நடராஜர் அபிசேகம், கேதாரகௌரி நோன்பு, இலட்சார்ச்சனை, மார்கழி திருவாதிரை, ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
புங்குடுதீவிலே இரண்டு இராச கோபுரங்களுடனம் அமைந்து சிறப்பைக்கொடுப்பதாய் இவ்வாலயம் அமைந்துள்ளது.
செவ்வாய், 19 பிப்ரவரி, 2013
வியாழன், 27 அக்டோபர், 2011
திங்கள், 13 ஜூன், 2011
செவ்வாய், 8 மார்ச், 2011
பெருங்காடு சிவன் கோயில்
மதுரையம்பதி எனவும், பெருங்காடு சிவன் ஆலயம் எனவும், கிராஞ்சியம்பதி சிவன் ஆலயம் எனவும் அழைக்கப்படும் புங்குடுதீவு கிராஞ்சியம்பதி சிறீ மீனாட்சியம்பாள் சமேத சோமசுந்தரேஸ்வர சுவாமி திருக்கோவில்.
யாழ்ப்பாணத்தின் மேலைத்திசையில் அமைந்த சப்ததீவுகளில் பொன்விளங்கு பூமியாக திகழ்வது புங்குடுதீவு. இப்புங்குடுதீவிலே கோவில்கள் நிறைந்து காணப்படும் பிரதேசம் பெருங்காடு எனும் அழகிய கிராமம். இங்கே வாழ்ந்து வந்த சிவப்பிராமணராகிய மார்க்கண்டேய குருக்கள் இப்பெருங்காடு சிவன் ஆலயத்தை தாபிதம் செய்ததாக கூறுவர். இங்கே எழுந்தருளியிருக்கும் சிவலிங்கம் காசியிலிருந்தும், அருளாட்சி கொடுக்கும் அம்பிகையின் சிலை மதுரையிலிருந்தும் கொண்டு வரப்பட்டவை. ஆலயத்தின் திருப்பணிகள் முடியுமுன்னரே மார்க்கண்டேயக் குருக்கள் கதிர்காமத்திலே இறைவனடி சேர்ந்தார்.

அதன் பின்னர் குருக்களின் மனைவியாரும் அவரின் சகோதரர்களும் சேர்ந்து உர்மக்களின் உதவியோடு பிள்ளையார் கோயில், நவக்கிரக கோயில், வைரவர் கோயில் ஆகியவற்றோடு கூடிய ஆலயத்தின் திருப்பணிவேலைகளை நிறைவு செய்து சிறப்பாக கும்பாபிடேகத்தினையும் செய்தார்கள்.
இரண்டாவது கும்பாபிடேகமும் சிறிது காலத்திலேயே இடம்பெற்றது. இதன்பின் 1977ம் ஆண்டு பஞ்சலிங்க கோயில், மகாவிட்டுணு கோயில் என்பனவும் அமைக்கப்பட்டு மூன்றாவது கும்பாபிடேகமும் சிறப்பாய் நடைபெற்றது. இதன்பின் 1991இலும் பின் 2005இலும் கும்பாபிடேகங்கள் நடைபெற்றன.
இவ்வாலயத்திலே வருடாந்த மகோற்சவம் பங்குனி மாதத்தில் நடைபெறும். இதைவிடவும் சங்கிராந்தி பூசை, பிரதோசம், நால்வர் பூசை, நவராத்திரி பூசை, நடராஜர் அபிசேகம், கேதாரகௌரி நோன்பு, இலட்சார்ச்சனை, மார்கழி திருவாதிரை, ஏகாதசி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.
புங்குடுதீவிலே இரண்டு இராச கோபுரங்களுடனம் அமைந்து சிறப்பைக்கொடுப்பதாய் இவ்வாலயம் அமைந்துள்ளது.
வியாழன், 24 பிப்ரவரி, 2011
புங்குடுதீவு கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில்
_______________________________________________-
!1853ஆம் ஆன்டில் காசிநாதர் சின்னதுரை என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் அமைக்கப் பட்டது .இதன் பின்னர் அவரது மகனான ஐயாத்துரை என்பவரும் தொடர்ந்து பேரனான நாகரத்தினம் ஆசிரியர் (கந்தசாமி)அவர்களும் ஆலய முகாமையாளராக பணிபுரிந்தனர் .இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா வைகாசி மத்தஹிலே வெகு சிறப்பாக நடைபெறும் .தெற்கு புறமாக சிவன் கோவிலையும் சற்று பக்கத்திலே தென்கிழக்கு திசையிலே மாரியம்மன் ஆலயத்தினையும் கோடன சிறப்பான ஆலயம் இதுவாகும்.ஆலயத்தின் தெற்கு பக்கத்திலே நால்வர் மேடம் ஒன்று இருந்தது இந்த மடத்திலே தன முதலாவது சம்ஸ்கிருத பாடசாலை அமைக்கப் பட்டது இந்த ஆலய முன்றலி தான் கண்டி தென்னக்கும்பர யோகீஸ்வர பெரியாருக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலை படி மாற்றமாக நடத்திய சிறப்புடைத்து .புங்குட்தீவில் பல பாடசாலைகளை அமைத்த பசுபதிபிள்ளை விதானையார் இந்த ஆலய நினைவாக சுப்பிரமணிய வித்தியாசாலையை உருவாக்கினார் .இவ்வாலயதினை புனருத்தாரணம் செய்யும் பொருட்டு அமைக்கப்பட்ட அறங்காவலர் சபைக்கு தலைவாராக சட்டத்தரணி ப.கதிரவேலு தெரிவானார் .இவரோடு தொடராக ஊரதீவு அருணாசலம் இருபிட்டி சின்னதம்பி இராமலிங்கம் கந்தசாமி.பாடகர் பராசு ,பொறியிலாளர் வைத்திலிங்கம் போன்றோரும் முக்கியமானவர்கள் .இந்த ஆலயத்தின் திருவிழா களம் புங்குடுதீவின் வசந்த களம் எனலாம் .பத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறும் .முக்கியமாக கந்தசாமி கோவில் பூங்காவனம் என்ற சொற்பதம் புங்குடுதீவின் வரலாற்றுப் பதிவுகளிலே இடம் பிடித்துள்ளமை மறக்கக முடியாதது . பூங்கவனதிருவிழா ஆலயமுன்றலில் ஆயிரன்ம்கால் மண்டபம் சிகரம் என மேடை அமைக்க்கப்பட்டு பல கூட்டம் மேளதாளம் ஒலிக்கக சின்ன மேளம் என அழைக்கபட்ட சதுர்கச்செரிகள் சிறப்புற இன்னிசைக் கச்சேரிகள் முழங்க அதிகாலை கோழி கூவும் காலம் விடியல் காணும் .
இந்த ஆலயத்தின் கந்த சஷ்டி காலத்தில் சிறப்புரை பாராயணம் செய்வோர் வரிசையில் குருமூர்த்தி சாஸ்திரியார் வைத்திய கலாநிதி கணபதிபிள்ளை (சின்ன தம்பர்)தில்லையம்பலம் (குமரேசு வாத்தியார் )வித்துவான் பொன்.கனகசபை சதாசிவக்குருக்கள் வை.குனபதிப்பில்லை தி சதாசிவம் க.முத்துலிங்கம் (நொத்தாரிசு)வித்துவான் சி ஆறுமுகம் சி.க.நாகலிங்கம் ஆசிரியர் அம்பலவாணர் ஆசிரியர் குணமாலை ஆசிரியர் ஆகியோர் உள்ளடங்குவர்
இந்த ஆலய சூரன்போர் அலாதியானது முக்கியமாக சூரன் தலைய ஆட்டுவோர் நாரதர் வேடம் போடுவோர் இந்த விழாவை சுவார்ச்யமக்குவர் .சூரன் தலையை ஆட்டுவோராக இரு பிட்டி சின்னதம்பி பாடகர் பராசு இராமலிங்கம் பசுபதி போன்றோரும் நாரதர்களாக பெரியதம்பி.சரவனையப்பா செல்லையா போன்றோர் சிறப்பாக செயலாற்றுவர் .இந்த ஆலயத்தின் முன்பக்க தோற்றம் இன்னும் அரைகுறையாக கட்சி தருவது இன்னமும் மக்களை மனதுருத்துகிறது .
ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
__________________________________
புங்குடுதீவில் உள்ள புராதன பழமை வாய்ந்த ஆலயங்களில் பெருங்காடு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயமும் ஒன்றாகும் . பக்தர் ஒருவரின் வாக்குப்படி ஆலயத்தின் மேற்குப் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து அம்பாளின் மூலவிக்கிரகம் ஒன்றினை கண்டெடுத்து அங்கெ காணப்பட்ட வேப்ப மரத்தின் கீழ் வைத்து வழிபட்டனர் .அப்போது புங்குடுதீவு இரண்டாம் வட்டாரத்தை சேர்ந்த இராமநாதர் அம்பலவாணர் அவர்கள் தனதுவயல் காணியில் ஒரு ஆலயத்தை அமைத்து அம்பாளை பிரதிஸ்டை செய்து வழிபட்டுவர ஒழுங்கு செய்தார் .பின்னர் அவரும் அவரது குடும்பத்தினரும் இந்த ஆலயத்தை பொதுமக்களிடம் தெரிவாகும் ஒரு நிர்வாகத்திடம் கையளிக்க முடிவு செய்தனர்.அதன்படி(1947 )முறையே ஆசிரியர்களான சு.வில்வரத்தினம் ,ந.சோமசுந்தரம்,சி.மாணிக்கம் ஆகியோரின் தலைமையின் கீழ் தெரிவான நிர்வாகத்தில் ஆலயம் மிக சிறப்பாக வளர்ச்சி கண்டது .
இவ்வாலயத்தில் வருடாந்த திருவிழா ,மாசி மக இலட்சார்ச்சனை ,ஆடிப்பூரம் திருவெம்பாவை நவராத்திரி விழாக்களும் வெகு விமரிசையாக நடாத்தப்படும் .வடபகுதியிலேயே மிகவும் அழகான தாமரை தடாகத்தினை முன்பக்கமாக கொண்ட ஒரே ஒரு ஆலயமாக இது திகழ்ந்தது.பல நிழல் மரங்கள் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்படுகின்றன. இந்த ஆலயத்தில் வேள்விக்காக ஆடு மாடு சேவல் என விலங்குகளை காணிக்கையாக வழங்கும் வழக்கம் இருந்து வந்தது . ஆனால் பிற்காலத்தில் இந்த வழமையை ஒழிக்க வேண்டும் என்று இந்த ஆலய நிர்வாகத்தினர் முடிவெடுத்து அதனை நிறைவேற்றி வைத்தனர் .இந்த புரட்சியை முதலில் நடத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் இந்த நிர்வாகத்தினர் .இந்த ஆலயத்தின் கூட்டுப் பிரார்த்தனை மன்றத்தினர் மிகவும் சிறந்த பணியை செய்து வந்தனர் . இவர்களோடு ஆலயத்திருவிழா காலங்களில் மடத்துவெளி முருகன் ஆலய கூட்டு பிராத்தனை குழுவினரும் இணைந்து கூட்டு வழிபாட்டை செய்து வருவது குறிப்பிடத் தக்கது.இந்த வழிபாட்டில் முக்கியமாக காந்தி குணரத்தினம் நாகேந்திரம் மாணிக்கம் ஆசிரியர் போன்றோர் முக்கியமானவர்கள் . இப்போது இந்த ஆலயம் மூர்த்தி தலம் விருட்சம் தீர்த்தம் ராஜகோபுரம் என அனைத்தும் அமையப் பெற்ற சிறப்பொடு அம்பாள் ஆட்சி செய்ய கோலோச்சுகிறது ..இந்த ஆலயத்தின் வளர்ச்சிக்கென சுவிட்சர்லாந்து ஜெனீவா நகரில் வசிக்கும் செல்லையா சந்திரபாலன் சுவிஸ் மக்களிடம் நிதி சேகரித்து அனுப்பியிருந்தமை பாராட்டத் தக்கது.
சனி, 4 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




















.jpg)









.jpg)

.jpg)









