பெருங்காடு

பெருங்காடு


வியாழன், 24 பிப்ரவரி, 2011

புங்குடுதீவு    கிராஞ்சியம்பதி கந்தசாமி கோவில் 
_______________________________________________-
!1853ஆம் ஆன்டில் காசிநாதர் சின்னதுரை என்னும் முருக பக்தரால் இவ்வாலயம் அமைக்கப் பட்டது .இதன் பின்னர் அவரது மகனான ஐயாத்துரை என்பவரும் தொடர்ந்து பேரனான நாகரத்தினம் ஆசிரியர் (கந்தசாமி)அவர்களும்  ஆலய முகாமையாளராக பணிபுரிந்தனர் .இந்த ஆலயத்தின் வருடாந்த திருவிழா வைகாசி மத்தஹிலே வெகு சிறப்பாக நடைபெறும் .தெற்கு புறமாக சிவன் கோவிலையும் சற்று பக்கத்திலே தென்கிழக்கு திசையிலே மாரியம்மன் ஆலயத்தினையும் கோடன சிறப்பான ஆலயம் இதுவாகும்.ஆலயத்தின் தெற்கு பக்கத்திலே நால்வர் மேடம் ஒன்று இருந்தது இந்த மடத்திலே தன முதலாவது சம்ஸ்கிருத பாடசாலை அமைக்கப் பட்டது இந்த ஆலய முன்றலி தான் கண்டி தென்னக்கும்பர யோகீஸ்வர பெரியாருக்கும் தவத்திரு குன்றக்குடி அடிகளாருக்கும் ஏற்பட்ட கருத்து மோதலை படி மாற்றமாக நடத்திய சிறப்புடைத்து .புங்குட்தீவில் பல பாடசாலைகளை அமைத்த பசுபதிபிள்ளை விதானையார் இந்த ஆலய நினைவாக சுப்பிரமணிய வித்தியாசாலையை உருவாக்கினார் .இவ்வாலயதினை புனருத்தாரணம் செய்யும் பொருட்டு அமைக்கப்பட்ட அறங்காவலர் சபைக்கு தலைவாராக சட்டத்தரணி ப.கதிரவேலு தெரிவானார் .இவரோடு தொடராக ஊரதீவு அருணாசலம் இருபிட்டி சின்னதம்பி இராமலிங்கம் கந்தசாமி.பாடகர் பராசு ,பொறியிலாளர் வைத்திலிங்கம் போன்றோரும் முக்கியமானவர்கள் .இந்த ஆலயத்தின் திருவிழா களம் புங்குடுதீவின் வசந்த களம் எனலாம் .பத்து திருவிழாக்களும் வெகு விமரிசையாக நடைபெறும் .முக்கியமாக கந்தசாமி கோவில் பூங்காவனம் என்ற சொற்பதம் புங்குடுதீவின் வரலாற்றுப் பதிவுகளிலே  இடம் பிடித்துள்ளமை மறக்கக முடியாதது . பூங்கவனதிருவிழா ஆலயமுன்றலில் ஆயிரன்ம்கால் மண்டபம் சிகரம் என மேடை அமைக்க்கப்பட்டு பல கூட்டம் மேளதாளம் ஒலிக்கக சின்ன மேளம் என அழைக்கபட்ட சதுர்கச்செரிகள் சிறப்புற இன்னிசைக் கச்சேரிகள் முழங்க அதிகாலை கோழி கூவும் காலம் விடியல் காணும் .
இந்த ஆலயத்தின் கந்த சஷ்டி காலத்தில் சிறப்புரை பாராயணம்  செய்வோர் வரிசையில் குருமூர்த்தி சாஸ்திரியார் வைத்திய கலாநிதி கணபதிபிள்ளை (சின்ன தம்பர்)தில்லையம்பலம் (குமரேசு வாத்தியார் )வித்துவான் பொன்.கனகசபை சதாசிவக்குருக்கள் வை.குனபதிப்பில்லை தி சதாசிவம் க.முத்துலிங்கம் (நொத்தாரிசு)வித்துவான் சி ஆறுமுகம் சி.க.நாகலிங்கம் ஆசிரியர் அம்பலவாணர் ஆசிரியர் குணமாலை ஆசிரியர் ஆகியோர் உள்ளடங்குவர் 
இந்த ஆலய சூரன்போர் அலாதியானது முக்கியமாக சூரன் தலைய ஆட்டுவோர் நாரதர் வேடம் போடுவோர் இந்த விழாவை சுவார்ச்யமக்குவர் .சூரன் தலையை ஆட்டுவோராக இரு பிட்டி சின்னதம்பி பாடகர் பராசு இராமலிங்கம் பசுபதி போன்றோரும் நாரதர்களாக பெரியதம்பி.சரவனையப்பா செல்லையா போன்றோர் சிறப்பாக செயலாற்றுவர் .இந்த ஆலயத்தின் முன்பக்க தோற்றம் இன்னும் அரைகுறையாக கட்சி தருவது இன்னமும் மக்களை    மனதுருத்துகிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக